சென்னை: ஜி.எஸ்.டி,சாலையில் பொத்தேரி ரயில் நிலையத்தை ஒட்டி புதிய ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுக்கிறது. அந்த வகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக,தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்சில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரீமியம் பார்க்கிங் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் திறக்கப்பட்டது. இந்தஉணவகத்துக்கு பயணிகள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி சாலையில் பொத்தேரி ரயில் நிலையத்தை ஒட்டி புதியதாக ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
பழைய ரயில் பெட்டிக்கு வண்ணம் தீட்டி , உள்பகுதியில் மரபலகைகளால் வடிவமைத்து உணவகமாக மாற்றி உள்ளனர். இந்த உணவகத்தில் தென் இந்தியஉணவு வகைகள் மட்டுமின்றி, சைனீஸ், இத்தாலிய உணவு வகைகளும் வழங்கப்பட உள்ளன. 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.5 கோடி செலவில் உருவான இந்த ரயில் பெட்டி உணவகத்துக்கு "ரூட் 32” என்னும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும்.
» தமிழகத்தில் மானிய விலையில் தரமான பாரத் பிராண்ட் பருப்பு வகைகள் விநியோகம்: மத்திய அரசு அறிமுகம்
» வடமாநிலங்களில் கடும் குளிரில் மக்கள் அவதி: விமானம், ரயில் சேவை பாதிப்பு
ஜிஎஸ்டி சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் ரயில் பயணிகள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில், இந்த ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
மேலும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பொத்தேரி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இங்குவரும் பயணிகளையும் கவரும் விதமாக, இந்த ரயில் பெட்டி உணவகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago