புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சர்ச்சைக்குரிய காரில் நடிகை அமலாபால் வந்தார். கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது என தெரிவி்த்தார். அத்துடன் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டு தந்தார்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் புதிய நவீன ரக காரை அமலாபால் பதிவு செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்து. வரிஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்கள் கொடுத்து புதுச்சேரியில் கார் பதிவு செய்ததாக கேரள அரசு தரப்பில் விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய காரில் புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்தார் நடிகை அமலாபால்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த அந்த சொகுசு காரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். விழாவில் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டு கொடுத்தார்.
பின்பு நடிகை அமலாபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை யற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago