மதுரை: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 116 கல்லூரிகள், 90-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரி, பல் கலைக்கழக இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் மூலம் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றி திருத்தும் திட்டத்தை பல்கலைக்கழக நிர் வாகம் அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் கீழ் விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு குறிப் பிட்ட நேரம் ஒதுக்கி வாய்ப் பளிக்கப்படும். ஒருவர் முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு வாய்ப்பளிக்கப்படும். இதற்கு சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் தேர்வில் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், 2023-24-ம் கல்வி யாண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான 1.20 லட்சம் விடைத்தாள்களும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை, முதுநிலை பாடப் பிரிவுக்கான விடைத்தாள்களும் ஆன்லைனில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட நிலை யில், திருத்தும் பணி தொடங்கும் முன்பே பிரச்சினை எழுந்தது.
இத்திட்டத்துக்கு முறையான டெண்டர் இன்றி, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்குவதாக பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவினர் குற்றம் சாட்டினர். இதனால் அந்த நிறுவனத்துக்கு கட்டணம் வழங்குவதிலும், விடைத்தாள் திருத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள் ளது.
இது தொடர்பாக காமராசர் பல்கலைக்கழக கூட்டு நட வடிக்கைக் குழு சார்பில், தமிழக உயர்கல்வித் துறை செயலர் மற்றும் துணைவேந்தர், பதிவாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டு நட வடிக்கைக் குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘ஏற்கெனவே சிண்டிகேட் கூட்டத்தில் இத்திட்டம் முன் மாதிரியாகக் கொண்டு வரப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், ஏப்ரல் தேர்வுக் கான விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தியதில் முறை யாக ஒப்பந்தப்புள்ளி இன்றி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத் துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்துக்கு மேல் வெளி நிறுவனத்துக்கு பணம் வழங்க சிண்டிகேட் நிதிக்குழுவில் ஒப்புதல்பெற்று ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. இத்திட்டத்தில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளது. தேர்வுத் துறையினரிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என உயர் கல்வி செயலருக்கு புகார் அனுப்பி உள்ளோம் என்று கூறினர்.
துணைவேந்தர் ஜெ.குமார் கூறு கையில், ‘இத்திட்டத்தால் துரிதமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். விடைத்தாள்களை முறையாக பாதுகாக்க முடியும். காணவில்லை என்ற சிக்கல் எழாது. கடந்த பருவத் தேர்வில் இத்திட்டம் நடை முறைபடுத்தப்பட்டது. நவம்பர் தேர்வில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யப்பட்டதில் கட்ட ணம் வழங்குவதில் சில இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்பிரச்சினை ஓரிரு நாளில் சரியாகிவிடும்’ என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago