தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மற்றும் மெச்சத் தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

அந்தவகையில் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுக்கு லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ஆர்.லலிதா லட்சுமி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை தளவாய் (ராஜபாளையம், 11ம் அணி) சு.ராஜசேகரன், ஈரோடு சிறப்பு இலகுப்படை உதவி ஆய்வாளர் ஆர்.ராயப்பன் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருது பட்டியலில் 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மதுரை காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர், சென்னைஐ.ஜி. (பணி அமைப்பு) ரூபேஷ்குமார் மீனா, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் க.அண்ணாதுரை, திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் செ.செங்குட்டுவன், வேலூர் குற்றப்புலனாய்வு மற்றும்சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் மா.தேவேந்திரன், நீலகிரி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு உதவிஆய்வாளர் செ.செல்லத்துரை, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ம் அணி காவல் ஆய்வாளர் அ.மணி, தஞ்சை குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கோ.ராஜகோபால், மதுரை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-ம்அணி உதவி படை தலைவர் சீ.அழகுதுரை, சென்னை இணையவழி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆர்.எம்.பழனிவேல். சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவுசிறப்பு உதவி ஆய்வாளர் க.மோகன்பாபு, சென்னை தனிப்பிரிவு குற்றபுலனாய்வு சிறப்பு உதவி ஆய்வாளர் க.வெங்கடேசன், தேனி குற்றப்புலனாய்வு தனி பிரிவு உதவி ஆய்வாளர் ஐ.ராயமுத்து, சென்னை மாநில குற்ற ஆவண காப்பக கணினிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பி.ஆர்.அணில்குமார், நாமகிரிப்பேட்டை காவல் நிலையசிறப்பு உதவி ஆய்வாளர் நா.ஈஸ்வரன், ஆற்காடு தாலுகா வட்டம் ஆய்வாளர் கோ.சாலமோன் ராஜா, நாமக்கல் காவல் நிலைய சிறப்புஉதவி ஆய்வாளர் என்.வி.எம்.அருள்முருகன், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆ.குணசேகரன், சென்னை மாநில குற்ற ஆவண காப்பக கணினிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் லெ.சுந்தரம், தஞ்சை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சீ.வெங்கடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல சி.பி.ஐ. இணை இயக்குநர் வித்யா ஜெயந்த் குல்கர்னிக்கு தகைசால் பணிக்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் 1,132 போலீஸாருக்கு வீரதீர மற்றும் சேவா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சாதனை அதிகாரியாக கருதப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மா உட்பட 37 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE