சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 3 அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘‘வேளாண்மை வளர்ச்சிதிட்டத்தின்கீழ் அங்கக(ஆர்கானிக்) வேளாண்மையில் ஈடுபடுவதுடன், பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் 3 அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுடன், பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, நம்மாழ்வார் விருதுக்கு 3 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோன்புச்சாவடியை சேர்ந்த கோ.சித்தர் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியவையும், திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கே.வெ.பழனிசாமிக்கு 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், சான்றிதழ், பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம் அஞ்சுகட்டு கிராமத்தை சேர்ந்த கு.எழிலனுக்கு 3-ம் பரிசாக ரூ.1 லட்சம், சான்றிதழ், பதக்கமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago