சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக் கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30-க்குள் நடத்திமுடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களை நேரடி பணி நியமனம் செய்யும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளிகளில் உள்ளஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மே 1-ம் தேதிக்குள் கணக்கிட இறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை தேவை யுள்ள பள்ளிகளுக்கு மே 31-ம்தேதிக்குள் பணிநிரவல் செய்ய வேண்டும்.
அதேபோல், அனைத்து வகைஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30-ம்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதன்பின் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஜூலை 1-ம் தேதிக்குள் மதிப்பீடுசெய்து, அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் கருத்துருக்கள் மீது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படும். தொடர்ந்து பணி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் விவரம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியக்குழு அக்.31-ம் தேதிக்குள் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
» சாலை விபத்தில் சிக்கி இலங்கை அமைச்சர் உயிரிழப்பு
» பாஜகவில் மீண்டும் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்: எம்எல்சி பதவி வழங்கியும் காங்கிரஸை விட்டு விலகினார்
அதன்பின் அறிவிப்பாணை அடிப்படையில் ஆசிரியர் தேர்வுவாரியம் ஜன. 31-ம் தேதிக்குள்தேர்வை நடத்தி, அதன் முடிவுகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மே 1 முதல் 31-ம் தேதிக்குள் முடித்து தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதிப் பட்டியலை வழங்க வேண்டும். இந்த வழிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநர், டிஆர்பி தலைவர் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 secs ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago