மதுரை: முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில் அழைக்கக்கோரி 11.9.1995-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
தேவர் என்ற பெயரில் அழைக்கப்படாததால் கள்ளர், அகமுடையார் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர். எனவே, கள்ளர், மறவர், அகமுடையார் கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
» போயஸ் தோட்டத்தில் மீண்டும் குடியேறிய சசிகலா: கோ பூஜை நடத்தி வழிபாடு செய்தார்
» மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தை நீதிமன்றம் பூர்த்தி செய்ய முடியாது. மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago