திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் 41.54 சதவீத இளைய தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரிஷப் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 20,80,800 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக 40 வயது முதல் 49 வயது வரை 4,58,463 வாக்காளர்கள் உள்ளனர்.
முதல் தலைமுறை வாக்காளர்களாக 40,609 வாக்காளர்கள் ( 19 வயது ) உள்ளனர். 20 வயது முதல் 29 வயது வரை 3,88,361 வாக்காளர்களும், 30 வயது முதல் 39 வயது வரை 4,35,484 வாக்காளர்களும், 40 வயது முதல் 49 வயது வரை 4,58,463 வாக்காளர்களும், 50 வயது முதல் 59 வயது வரை 3,43,833 வாக்காளர்களும், 60 வயது முதல் 69 வயது வரை 2,28,760 வாக்காளர்களும், 70 வயது முதல் 79 வயது வரை 1,31,676 வாக்காளர்களும், 80 வயதுக்கு மேல் 53,614 வாக்காளர்களும் உள்ளனர். முதல் தலைமுறையினர், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என இளைய தலைமுறையில் (19 வயது முதல் 39 வயது வரை) 8,64,454 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மொத்த வாக்காளர்களில் 41.54 சதவீதம் உள்ளன.
இதனால், இளைய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, விசிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள், நடைமுறையில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலை வகிக்கும். இதில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஆட்சியாளர்களின் பங்களிப்பு என்பது அதிகம் இடபெறக்கூடும்.
» வீரமாமுனிவருக்கு மணிமண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இதேபோல், 8,02,296 நடுத்தர வயது (40 முதல் 59 வரை) வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது மொத்த வாக்காளர்களில் 38.55 சதவீதமாகும். இவர்கள் அனைவரும், குடும்ப சுமையில் உள்ளவர்கள். வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப சுமையின் பாரம் அதிகரித்துள்ளது.
இது மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பிரதிபலிக்கும். இதனை எதிர்கொள்ள நடைமுறையில் உள்ள இலவச திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னிலைப் படுத்தலாம். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ள 4,14,050 பேர் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இது மொத்த வாக்காளர்களில் 19.89 சதவீதமாகும். இவர்களில், கணிசமானவர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். இவர்களது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வராததால், அவர்களிடையே அதிருப்தி நீடிக்கிறது.
மேலும், இதர மூத்த குடிமக்களுக்கான சலுகைகளும் வெகுவாக குறைக்கப் பட்டுள்ளன. இதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதியோர் உதவித் தொகை என்பது தகுதியானவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற கோரிக்கை கானல் நீராகவே உள்ளது. எனவே, மூத்த குடிமக்களின் வாக்குகளை ஈர்க்க புதிய அறிவிப்புகளுடன் அரசியல் கட்சிகள் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago