வைட்டமின் குறைபாட்டுக்கான 78 மருந்து தரமற்றவை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்துதரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

கடந்த மாதத்தில் மட்டும் 1,008 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 78 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

தரமற்ற மருந்துகள் குறித்த விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப் பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த மருந்துகளை தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE