சிறையில் நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசுக்கு சிறைத் துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு தமிழக சிறைத்துறை அதிகாரிகளுக்கு, தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி சுற்றறிக்கை ஒன்று அனுப்பி யுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதால், அதற் கான பட்டியலைத் தயாரித்து பிப்.10-ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப் பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை களிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை சிறைத் துறை அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் 15 பேர்
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில், நன்னடத்தை அடிப்படையில் 185 கைதிகள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
பெண்கள் தனிச் சிறையில் 15 பேர் விடுதலை யாக தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைகளில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago