சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசுதனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசும்வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது.
இதை முன்னிட்டு, தொழில் அமைப்புகள், பல்வேறு சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இதில், தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா வேண்டாமா, ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கியஅம்சங்கள், தமிழக அரசுத் துறைகளில் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், புதிய திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, வரும் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரிமுதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த சூழலில்,வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago