சாமிதோப்பு வைகுண்டர் தலைமைப் பதியில் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி நேற்று மதியம் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்தார். அவருக்கு அதிமுக குமரி மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் நடைபெறும் தைத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பாரம்பரிய முறைப்படி மேல்சட்டை இன்றி, தலையில் தலைப் பாகை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார்.

அய்யா வைகுண்டரின் சிறப்புகளை, அவருக்கு கோயில் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். பின்னர், அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர், கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமண நிகழ்ச்சியிலும், மார்த் தாண்டத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இரவு திருவனந்தபுரம் வழியாக சென்னை திரும்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்