செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.120 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட அலுவலகம் பராமரிப்பு இன்றி சீரழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் 2019 நவ.29-ல் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து துறை அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. 2020 அக்.23-ல் அன்றைய முதல்வர் பழனிசாமி, ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் ௮லுவலகம் கட்டப்பட்டு, தற்போது ஒரு சில துறைகளை தவிர்த்து மற்ற துறைகளைக் கொண்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாள்தோறும், 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாகவும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அலுவலகத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. பெரும்பாலான கழிவறைகளில் வருவதில்லை. எந்த அலுவலகம் எந்த தளத்தில் உள்ளது என்ற அறிவிப்பு பலகைகள்கூட வைக்கப்படவில்லை. இதனால், எந்த அலுவலகம் எங்கு செயல்படுகிறது என்று தெரியாமல், மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும் தவித்து வருகின்றனர்.
» ராமர் கோயில் கும்பாபிஷேக நேரலை ஒளிபரப்புக்கு போலீஸார் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட்
» சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்ற இன்பநிதி: திமுகவினர் ஆரவாரம்
ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் உள்ளன. இவை சரியாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், அலுவலர்களும் பொதுமக்களும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அலுவலகத்தில் மேல் தளங்களுக்கு செல்ல பயன்படுத்தும் 6 லிப்ட்களில் ஒன்று மட்டுமே இயங்குகிறது. 4 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எப்படி படிகளில் ஏறி மற்ற தளங்களுக்கு சென்று கோரிக்கை மனு கொடுக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அது மட்டுமின்றி பொதுமக்கள் பருக குடிநீர் வைக்கப்படவில்லை. துறை அலுவலகத்தில் சந்திக்க வரும் பொதுமக்கள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. வாகனங்கள் நிறுத்த முறையான பார்க்கிங் வசதி இருந்தும் அவை சரியான முறையில் நிறுத்த வழிகாட்டுதல் இல்லாததால் தாறுமாறாக நிறுத்தி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ உட்பட எந்த மொபைல் நெட்வொர்க்கை உபயோகப்படுத்தினாலும் சரியாக சிக்னல் கிடைப்பதில்லை.
ஆட்சியர் அலுவலக பாதுகாப்புக்காக போதிய போலீஸார் இல்லை. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம், மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்கள் சாதாரணமாக நடந்து வருகின்றன. கட்டிடங்களின் பராமரிப்பும் படுமோசமாக உள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும் என்று நினைத்து இந்த அலுவலகத்துக்கு பணியாற்ற வந்தோம். ஆனால் இங்கு முறையாக எந்தவசதியும் இல்லை. லிப்ட் சரிவர இயங்கவில்லை, கழிவறை பராமரிக்கப்படவில்லை. வளாகத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நாய்களின் கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. குரங்கு தொல்லை அதிக அளவில் உள்ளது. போதுமான மின் கட்டமைப்பு வசதி இல்லை. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இந்த குறைபாடுகள் அனைத்தும் ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு பொதுமக்கள், ஊழியர்கள் நலன் கருதி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதோடு அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago