3 மண்டலங்களில் 23-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் தேனாம்பேட்டை மண்டலம் வெங்கட்நாராயணா சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், ஜன. 23-ம் தேதி காலை 6 முதல் 24-ம் தேதி காலை 6 மணி வரை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய மண்டலங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்