துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் ‘கேலோ இந்தியா’: அமைச்சர் அனுராக் தாக்குர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: கேலோ இந்தியா ஒரு போட்டி என்பதோடு மட்டுமில்லாமல் துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் தேசிய திட்டமாகும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த கேலோஇந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: நாட்டில்ஒவ்வொரு பகுதியிலும் வேர் அளவில் விளையாட்டுத் துறையை வலுப்படுத்தவே கேலோ இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கினார். இதன் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.

வரும் 2030-ம் ஆண்டு இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியையும், 2036-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியாதயாராகி வருவதாக பிரதமர் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.இதற்கான ஏற்பாடுகளை துறையின் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.

ஒரு நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை தமிழகத்திடம் ஒப்படைத்தால், அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கின்றனர். முன்பு தமிழகத்தில் செஸ் வீரர் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே தெரிவார். தற்போது பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் முன்னுதாரணமாக விளங்குகிறார்.

கேலோ இந்தியா போட்டிகளில் ஆசியாவின் பெருமை மிக்க சிலம்பம்போட்டியையும் டெமோ என்ற வகையில் சேர்த்துள்ளோம். தமிழகத்தின்பெருமையான திருவள்ளுவரையே கேலோ இந்தியா போட்டியின் சின்னமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கேலோ இந்தியா ஒரு போட்டி என்பதோடு மட்டுமில்லாமல் துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் தேசிய திட்டமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

கனவு நனவானது: இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் 6-வது பதிப்பை தமிழகம்நடத்துவது என்பது கனவு நனவாகிய தருணமாகும். இதையொட்டி டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றி. அதேபோல எங்களை வழிநடத்தி, விளையாட்டு போட்டியை பிரம்மாண்டமாக நடத்தஆதரவளித்த முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கும் எனது நன்றிகள்.

கேலோ இந்தியா போட்டியானது,விளையாட்டு வீரர்களின் திறமை களை வெளிக்கொணர்வதற்கு அடித்தளமாக இருப்பது மட்டுமின்றி, தேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்துதிறமை மிக்கவர்களை ஒன்றிணைக்கிறது. இந்த கேலோ இந்தியா போட்டியில் 25 வகையான விளையாட்டு போட்டிகளில் 6 ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்-2023 புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE