திமுக இளைஞரணி மாநாடு: சேலம் - ஆத்தூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு நாளை (ஜன.21) நடைபெறவுள்ளது.

சேலத்தில் இருந்து ஆத்தூர் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாளை உளுந்தூர்பேட்டை வழியாக சேலம், கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல் வழியாக சேலத்துக்கும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக கோவை, கேரளா செல்லலாம்.

கோவை மார்க்கத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை அல்லது கர்நாடகா செல்லும் வாகனங்கள், ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் (பவானி பைபாஸ்), பவானி, அம்மாப்பேட்டை, மேட்டூர், மேச்சேரி, தொப்பூர், தருமபுரி வழியாக செல்லலாம்.

தருமபுரி மார்க்கத்திலிருந்து, சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூர் வழியாகவும், தருமபுரி மார்க்கத்திலிருந்து ஈரோடு, கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, மேட்டூர், அம்மாப்பேட்டை பவானி, பெருந்துறை வழியாகவும் செல்லலாம்.

தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல் வழியாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,கர்நாடகா செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, தொப்பூர் வழியாக செல்லலாம்.

வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை அரூர் வழியாக சேலம் வரும் வாகனங்கள் வாணியம்பாடியில் இருந்து நாட்றாம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக செல்லலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE