சென்னை: சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
கரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் தயாரிப்புக்காக மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, கன்வர்லால் குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்களில் நேற்றுவருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதே புகாரில் வருமானவரித் துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது.இந்நிலையில், 2-வது முறையாக நேற்று அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சவுகார்பேட்டையில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்கள், மாதவரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆடிட்டர் சுப்பிரமணியன் அலுவலகத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், கிண்டியில் தொழிற்சாலை நடத்தி வரும் பீட்டர் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலை, கோட்டூபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள்சோதனை மேற்கொண்டனர். சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த டாக்டர் சுந்தர் என்பவரது வீட்டிலும்சோதனை நேற்று நடைபெற்றது. இவர் எம்ஜிஎம் நிறுவனத்தினரின் உறவினர் எனக் கூறப்படுகிறது. மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில். சோதனை தொடர்பான எந்த விவரத்தையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago