இளவட்டக் கல் தூக்கிய இளைஞர் நிலை தடுமாறியதில் கல் தவறி விழுந்து உயிரிழப்பு @ திருநாவலூர்

By என். முருகேவல்

திருநாவலூர்: திருநாவலூர் அருகே இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் பங்கேற்றவர், கல்லை தூக்கும் போது நிலை தடுமாறிய காரணத்தால் அவர் மீதே கல் விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த சேந்தநாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் முன்பு காணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இளவட்டக் கல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் திருமணமாகதவர்கள் மட்டுமே பங்கேற்பர் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பிரபு (29) என்பவரும் பங்கேற்றுள்ளார். அவர் இந்தப் போட்டியில் இளவட்டக் கல்லை தூக்கும் போது நிலை தடுமாறிய காரணத்தால் கல் தவறி அவர் தலை பகுதியில் விழுந்துள்ளது.

இதில் பலத்தக் காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரபு உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்