காவல், தீயணைப்பு, சிறை துறைகளில் 3,184 பேருக்கு சிறப்பு பதக்கம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவல், தீயணைப்பு - மீட்பு பணிகள், சிறைகள் - சீர்திருத்த பணி ஆகிய துறைகளில் பணியாற்றுவோர் தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் நாளில், தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல் துறையில் ஆண், பெண் காவலர்கள், காவலர் நிலை-1, தலைமை காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பேருக்கு ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’ வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தீயணைப்பு, மீட்பு பணிகள்துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்),முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் - போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஒட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி), தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கு தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது.

சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை வார்டர் (ஆண்), 2-ம் நிலை வார்டர் (ஆண், பெண்) நிலைகளில் 59 பேருக்கும் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பதக்கங்கள் பெறும் அனைவருக்கும் நிலை வேறுபாடின்றி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வழங்கப்படும்.

இதுதவிர, காவல் வானொலி, மோப்ப நாய் படை, காவல் புகைப்பட கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் தலா 2 பேர் என மொத்தம் 6 அதிகாரிகள், அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம்’ வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் பெறும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு அவரவர் நிலைக்கு ஏற்ப, ரொக்க தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்