துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கிய ஆர்எஸ்எஸ் - விஹெச்பி தலைவர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் - விஹெச்பி தலைவர்கள் வழங்கி உள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய இணைச்செயலாளர் பிஎம் நாகராஜன், ஆர்எஸ்எஸ் மாநில சேவைப் பிரிவு தலைவர் ராமராஜசேகர் உள்ளிட்டோர் சந்தித்து அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் வரும் 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையும் அளித்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின், விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE