சென்னை: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளார். அதில் உறுப்பினராக உள்ள பிரவீன் சக்ரவர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி சென்னை வந்துள்ளார். கட்சியின் துணை அமைப்புகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், பொதுமக்கள், ஆலைகள், நிறுவனங்களிடம் ஆலோசிக்க உள்ளார்” என்றார்.
இந்த கூட்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago