சென்னை: ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக் கூறி, ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை ஆஜராகச் சொல்லி அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை. ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக கவுன்சிலிங் செல்ல விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இதுதொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்து தரவுகளையும் எந்த தணிக்கையும் இல்லாமல் பெற வகை செய்யும் மொபைல் போன்ற தொழில்நுட்பங்களால் இன்றைய இளம் தலைமுறையினர் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர். ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பத்தில் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கபடுகின்றனர் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago