எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் 5 நாட்கள் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் 5 நாட்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் நடைபெற உள்ளன.

எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் 17-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதிமுக சார்பில் 19, 20 ,21, 27, 28ஆகிய 5 நாட்களில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியில்செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதிமுக செயல்பட்டுவரும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE