சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 12-ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும்வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்து கழகபணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் என 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 450 சிறப்பு பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 9445014450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களில் அறியலாம். கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் தலா 5, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, tnstc இணையதளம் அல்லது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
» “எங்கள் இருவரது பார்வையும் ஒன்றாக உள்ளது” - பவன் கல்யாணை சந்தித்தது குறித்து ராயுடு ட்வீட்
» போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு
1.24 லட்சம் பேர் முன்பதிவு: பொங்கலை முன்னிட்டு இதுவரை 1.24 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து செல்வதற்கு 83 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கார் மற்றும் இதர சொந்த வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, ஓஎம்ஆர், திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆம்னி கட்டணம் உயர்வு: இதற்கிடையே, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும்.
முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (விழுப்புரம், திருச்சி மார்க்கம்) விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும் கோயம்பேட்டுக்கு வர வேண்டும்.
கும்பகோணம் வழியாக என்எச்45 தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், கும்பகோணம் போக்குவரத்து கழக பேருந்துகள் (3X2 இருக்கை) தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago