சென்னை: தடுப்பூசிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேசிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பதற்காக தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், இணை சுகாதார இயக்குநர் வினய் குமார் ஆகியோர் பங்கேற்றனர். தடுப்பூசிகளின் எதிர்விளைவுகளைத் தடுப்பது குறித்த பரிந்துரைகளை அப்போது அவர்கள் எடுத்துரைத்தனர். தமிழகத்தில் அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர்.
இதுதொடர்பாக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
» போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு
» “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன்” - இபிஎஸ் தகவல்
இவைதவிர, பெரியவர்களுக்கு நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா, டைபாய்டு, கல்லீரல் அழற்சி உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. சிலருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
அதனை தடுத்து, பாதிப்புகளின் தன்மையை ஆவணப்படுத்தி ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பொது மக்களின் கருத்துகளைக் கேட்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்துகளை மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago