ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு பிறகு பெண் உயிரிழப்பு - விசாரணை நடத்த அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, தவறான சிகிச்சையால் இறந்ததாக உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சவுந்தர் (32). இவரது மனைவி சவுந்தர்யா (26). கடந்த 4-ம் தேதி சவுந்தர்யா பிரசவத்துக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 6-ம் தேதி சிசேரியன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டதால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நேற்று அதற்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அப்போது, சவுந்தர்யா உயிரிழந்தார். தவறனா சிகிச்சையால்தான் சவுந்தர்யா உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, சவுந்தர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்து உறவினர்களுக்கு புரியாததால் முற்றுகையில் ஈடுபட்டிருக்கலாம். அரசு மருத்துவமனைகள் மீது குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்