புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ஜன.18 முதல் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: கண்டமங்கலத்தில் புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜன. 18-ம் தேதி முதல்புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதுச்சேரி பிரிவு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை பணி மிக விரைவாக நடந்து வரும் நிலையில், கண்டமங்கலம் குறுக்கே புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே பாதை செல்கிறது. இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜன.18-ம் தேதி முதல் விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கலித்தீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பிஎஸ்.பாளையம், வாதானூர், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனூர் வழியாக வந்து புதுச்சேரிக்கு செல்ல வேண்டும்.

புதுச்சேரி - விழுப்புரம் மார்க்க மாக செல்லும் வாகனங்கள் சிவராந்தகம், கீழுர், மிட்டா மண்டகப்பட்டு, பள்ளி நேலியனூர், திருபுவனைப்பாளையம் மற்றும் திருபுவனை வழியாக வந்து விழுப்புரம் செல்ல வேண்டும்.

மேலும், விழுப்புரம் - புதுச்சேரி செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருவண்டார் கோவில், கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், ரசபுத்திரப்பாளையம், சின்னபாபு சமுத்திரம், கென்டியங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்