சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரத்தில் இருந்து ஜன.14, 16 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை அடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து ஜன. 15, 17 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06002) புறப்பட்டு, அதே நாள் இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரயிலில் மொத்தம் 24பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து ஜன.11, 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து ஜன.12, 14, 17 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் (06004) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
» ஆண்டாள் திருப்பாவை 26 | உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..!
» தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு @ தருமபுரி
இந்த ரயிலில் 3 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 9 ஏசி மூன்றுஅடுக்கு எகனாமிக் பெட்டிகள், 2 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 பொது பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago