எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டது

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில் நிலையத்தில் நிற்கும் ரயில்பெட்டிகளை யார்டுக்கும், அங்கிருந்து நிலையத்துக்கும் எடுத்துச்செல்ல ‘சண்டிங்’ ரயில் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்று, எழும்பூர் கோபாலசாமி யார்டில் இருந்து எழும்பூர் ரயில் நிலைய 1-வதுநடைமேடைக்கு நேற்று நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களில், அதன் 2 சக்கரங்கள் தடம் புரண்டன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே பணியாளர்கள், அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, ரயில் இன்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் முயற்சியிலும், சேதமடைந்த ரயில் தண்டவாளத்தையும் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு, ரயில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, ரயில் இன்ஜினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தி மீண்டும் இயக்கினர்.

இந்தச் சம்பவம் காரணமாக, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு வழக்கமாக வரும் வந்தே பாரத் ரயில், 7-வது நடைமேடைக்கு மாற்றிவிடப்பட்டது. மற்ற ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்