சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக நோக்கில் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.18.53 லட்சம் அபராதம் விதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக நோக்கில் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.18.53லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொந்த பயன்பாட்டுக்கு என வாங்கப்படும் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த வேண்டுமானால் டி-போர்ட் உரிமம் பெறவேண்டும்.

இதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விலையுயர்ந்த மற்றும் சொகுசு வாகனங்களை உரிமம் பெற்று சுற்றுலாவுக்கு பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5,273 வாகனங்கள் சோதனை: இந்நிலையில், முறையான உரிமம் பெறாமல் சொந்த உபயோகத்துக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 5 முதல் 9-ம் தேதி வரையிலான 5 நாட்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தணிக்கையில் 5,273 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. 155 வாகனங்கள் முறையாக சுற்றுலா உரிமம் பெறாமல் இயக்கப்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகன உரிமையாளர்களுக்கு ரூ.18 லட்சத்து 53,051 அபராதமாகவும், வரியாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 121 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

இவ்வாறு சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை முறையான உரிமம் பெறாமல் வாடகைக்கு இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்