மத்திய அரசு திட்டங்களின் பலனைப் பெற முகாம்களில் பெயரை பதிவு செய்ய வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக, ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ எனும் லட்சியப் பயணம் தொடர்பான நிகழ்ச்சி சென்னை, கோடம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசியதாவது: ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைந்து, வரும் 2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ எனும் லட்சியப் பயண யாத்திரைக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலனைப் பெற யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மூலம் 3.5 கோடி பேர் பயனடைவார்கள். ஜன்தன் யோஜனா மூலம் 1.5 கோடி பேர் வங்கி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 51 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் நலத் திட்டத்தில் பங்கு பெற தகுதியானவர்கள், இந்தச்சலுகைகளை அவர்கள் தங்கள் வீட்டுவாசலிலேயே பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முத்ரா கடன் திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.

விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் மதி தரன், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்