சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடுமுட்டி உயிரிழந்தவர் உடல் உறுப்புகள் தானம் @ குன்றத்தூர்

By செய்திப்பிரிவு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையில் மாடு முட்டி உயிரிழந்தவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 1-வது தெருவை சேர்ந்த துரைராஜ் (72), கார்பென்டராக வேலைசெய்து வந்தார்.

இவரது மனைவிமுருகம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு துரைராஜ் மாத்திரை வாங்குவதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் சாலை அஞ்சுகம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த மாடு முட்டியதில் சைக்கிளில் இருந்து துரைராஜ் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே மயங்கினார்.

தமிழக அரசு அறிவிப்பு: இதையடுத்து அவரை மீட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரைராஜ் நேற்று மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்த நிலையில் துரைராஜின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசுஅறிவித்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உடல் உறுப்பு தானம் செய்த துரைராஜ் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரது குடும்பத்தாருக்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த துரைராஜ் முதியோர் உதவித்தொகை ஏதும் வாங்கவில்லை என்றும் தற்போது அவர் இறந்து போனதால் அவரது மனைவிக்கு விதவைஉதவித்தொகை பெற்று தர வேண்டும் என ஆட்சியரிடம் அவரது மகள்கள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்