டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதேநேரம், செயற்கை நுண்ணறிவு ஏறத்தாழ 100 பேர் செய்யும் வேலையை செய்யும். இதனால் வேலை இழப்பும் நேரிடும். அதேபோல, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒரு செய்தியை உறுதி செய்து, வெளியிடும் முன்னதாக அது தொடர்புடைய அனைத்தையும் ஆராய்ந்த பிறகே வெளியிட வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE