ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அன்புமணி, துரை வைகோ ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தசைதன்யா, சென்னையை அடுத்தமாடம்பாக்கத்தில் குடும்பத்துடன்வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யகோரி அன்புமணி, துரை வைகோ வலியுறுத்தி உள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ: தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும். இதனால் தற்கொலைகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுவதும் முழுமையாக தடைசெய்து சட்டம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE