மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகள்... உச்சத்தில் அரிசி விலை! - புதுவையில் தவிக்கும் ஏழை மக்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ரேஷனில்லா சூழலில் புதுச்சேரியில் வெளிச்சந்தையில் விற்கும் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிலோவுக்கு ரூ. 15 முதல் ரூ. 20 வரை உயர்ந்துள்ளது. தற்போது ரேஷன் கார்டுக்கு அரசு தரும் பணம் போதாமல் ஏழை மக்கள் தவிக்கின்றனர்.

புதுச்சேரியில் மொத்தம் 3.34 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் அனைத்து கார்டுகளுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வந்தன.கடந்த ஆட்சியில் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட மோதலால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் அரிசிக்கான பணம் போடப்படுகிறது. மாநில அரசு சார்பில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு மாதம் ரூ.600, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 300 அரிசிக்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரிசி விலை உயர்வால் தற்போது தவிப்பதாக ஏழைகள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: புதுச்சேரியில் ரேஷன் கார்டுகள் கணக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. வருமானவரி கட்டுவோரும் சிவப்பு கார்டு வைத்துள்ளனர். ஆனால் ஏழைகள் மஞ்சள் அட்டை வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிலோ அரிசி ரூ. 30 என நிர்ணயித்து அதன் அடிப்படையில் அரிசிக்கு பதில் வங்கிக் கணக்கில் பணம் தருகின்றனர். அதுவும் மாதந்தோறும் சரியாக தருவதில்லை. தற்போது இத்தொகைக்கு அரிசி வாங்குவது கடினம்.

சாப்பாட்டு அரிசி தொடங்கி இட்லி அரிசி வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. அதுவும் கடந்த சில மாதங்களாக அரிசி கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை புதுச்சேரியில் உயர்ந்துள்ளது. ரூ.35-க்கு வாங்கிய அரிசி ரூ. 50-ஐ தாண்டியுள்ளது. அதனால் அரிசிக்காக போடும் பணம் போதவில்லை.

பணத்தை உயர்த்தி தருவதை விட ரேஷன் கடைகளை திறந்து அரிசி தந்தால் வெளிச்சந்தையில் விலை கட்டுக்குள் வரும். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதில் மவுனம் காக்கின்றன என்றனர். புதுச்சேரி, காரைக்காலையொட்டியுள்ள தமிழக பகுதிகளில் ரேஷனில் அரிசி தருகின்றனர். ஆனால் புதுச்சேரியிலோ ரேஷனில்லா சூழலால் கடும் பாதிப்பு நிலவுகிறது.

அரிசி கடைகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தமிழகம், கர்நாடகத்தில் சாகுபடி மையங்களில் நெல் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டாவில் அதிகளவில் சம்பா பருவ சாகுபடியை செய்யாததும் ஓர் காரணம். அனைத்து ரகத்திலும் அரிசி விலை இரு மாதங்களில் உயர்ந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘ரேஷன் கடைகளை திறந்து அரிசி தருமாறு கிராமப்புறங்கள் மட்டுமில்லாமல் நகரப்பகுதிகளிலும் கோரிக்கை அதிகளவில் எழத்தொடங்கியுள்ளது. துறை அமைச்சர் தரப்பிலும் ரேஷனைத் திறந்து அரிசி வழங்க அனுமதி கோரி மத்திய அரசிடம் மனு தரப்பட்டுள்ளது. ரேஷனைத் திறக்க மத்திய அரசு அனுமதி தேவை. அதனால் அதற்கான முயற்சி நடக்கிறது'' என்று குறிப்பிடுகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்