பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், முன்பதிவில்லாத ரயில் உள்ளிட்ட 3 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜன. 14,16-ம் தேதியும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜன. 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தாம்பரம் - திருநெல்வேலி இடையே வரும் 11, 13, 16-ம் தேதிகளிலும், திருநெல்வேலியில் இருந்து ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும், கோவை-சென்னை எழும்பூர் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்