செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகை; அமலாக்கத் துறை ஆய்வு செய்ய அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக ஆட்சியில், 2011-16-ம் ஆண்டில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது, போக்குவரத்துத் துறையில் பணிநியமனங்கள் பெற்றுத் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாகஅமைச்சர் செந்தில் பாலாஜி,அவரது சகோதரர் உள்ளிட்டோ ருக்கு எதிராக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குகளில் விசாரணையை முடித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், கடந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் உள்ளஎம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதானகுற்ற வழக்குகளை விசாரிக்கும்சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரி, அமலாக்கத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் மனு தாக்கல் செய் தார். மனுவை விசாரணைக்கு ஏற்றசிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல், நீதிமன்ற பணி நேரத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.

மேலும், இந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் பெறும் நடவடிக்கையின் தற்போதைய நிலை தொடர்பாக, பிப்.2-க்குள் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE