சென்னை: அதிகனமழையால் 2 முறை தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக தீவிர களப்பணியில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டிருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த டிச.17-ம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, ‘மிக்ஜாம்’ புயல் மழைவெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் நடைபெற்றதால், மாநாடு டிச.24-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அதிகனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றதால், தேதிகுறிப்பிடாமல் மாநாடு மீண்டும்தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக இளைஞர் அணி மாநாடு ஜன.21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» சென்னையில் ரூ.540 கோடியில் நவீன திரைப்பட நகரம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ ‘கலைஞர் 100’ விழா
» “பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும்” - ஆளுநர் தமிழிசை அழைப்பு
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி2-வது மாநில மாநாடு வரும் 21-ம்தேதி சேலத்தில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு இரண்டு முறை தள்ளிப்போனதால், வரும் 21-ம் தேதி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தவும், மாநாட்டுக்கு அதிக அளவில் இளைஞர்களை அழைத்து வருவதற்கும் இளைஞர் அணி மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago