சென்னை: சட்டவிரோத மணல் விற்பனைதொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரபல தொழிலதிபர்களான குவாரி உரிமையாளர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகளில் அரசு நிர்ணயித்தஅளவை விட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளதாகவும், மணல் குவாரிகளில்கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தை விட சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கெனவே பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவன பங்குதாரர்களும், பிரபல மணல் குவாரி தொழிலதிபர்களுமான திண்டுக்கல் கே.ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், சென்னை ஏ. ராஜ்குமார் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, அப்துல் சலீ்ம் மற்றும் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி ஆகியோர், ‘‘அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில்மனுதாரர்களின் பெயர்கள் இல்லாத நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டனர்.
அறிவுறுத்த கோரிக்கை: அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, ‘‘இதுதொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென மூவரையும் அறிவுறுத்த வேண்டும்’’ என கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கி்ல் தீர்வுகாணப்படும் வரை மூவருக்கும் அமலாக்கத் துறை பிறப்பித்த சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago