மெட்ரோ ரயில் பணியால் ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மெட்ரோ இரயில் பணிக்காக ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம், திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் மந்தைவெளி மெட்ரோ நிலையங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள் 07.01.2024 முதல் மூடப்படும்.

மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு: பகுதி 1: ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை) GRH பாயிண்டில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை - வலது - நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்பட்டன.

> ராயப்பேட்டை ஹை ரோட்டிலிருந்து GRH நோக்கி வரும் வாகனங்கள் - ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீலகிரிஸ் கடை - மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை - வலது - TTK சாலை - கௌடியா மட சாலை வரை செல்லும்.

> வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.

> அஜந்தா சந்திப்பில் இருந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பகுதி 2: ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை ) ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹை ரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் - வலது லஸ் சர்ச் சாலை- டி 'சில்வா சாலை - பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை - இடதுபுறம் திரும்பி - சி.பி இராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

> ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) – இடதுபுறம் - ரங்கா சாலை - வலது - கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ - லஸ் சர்ச் சாலை வழியாக - பி.எஸ்.சிவசாமி சாலை - வலது - சுலிவன் கார்டன் தெரு - இடது - ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

> கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர்.ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.

> சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.

> மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் MTC மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை – இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.

பகுதி 3: ஆர்கே மட் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)

வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி - செயின்ட் மேரிஸ் சாலை - இடதுபுறம் திரும்பி - சிபி ராமசாமி சாலை - காளியப்பா சந்திப்பு - நேராக ஆர்ஏபுரம் 3 வது குறுக்குத் தெரு சென்று - காமராஜர் சாலை - ஸ்ரீநிவாசா அவென்யூ - கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட்ட சாலை - இடது - திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் - வி.கே. ஐயர் சாலை - தேவநாதன் தெரு - வலது - செயின்ட் மேரிஸ் சாலை - இடது – ஆர். கே மட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மந்தைவெளி செல்லும் MTC பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் - செயின்ட் மேரிஸ் சாலை - வலதுபுறம் திரும்பி - சிருங்கேரி மட சாலை மற்றும் VK ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.

ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்