சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக அவர் ஆஜர்படுத்தபட்டார்.
இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதன்மூலம் 14-வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.
» “மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்” - அண்ணாமலை
» ‘‘தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது’’ - நிர்மலா சீதாராமன்
இதனிடையே, ஜாமீன் கோரி 3-வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago