பாஜக அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக ஓபிஎஸ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜெயலலிதாவின் மறைவுக்குபிறகு, அவரின் தியாகத்துக்காக அவருக்கு நிரந்தர பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதயத்தில் ஈரம் இல்லாமல், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பட்டம் சூட்டிக்கொண்டார். அந்த பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியை நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. வாழ்த்து கடிதத்தை கொடுத்தேன். சசிகலா விரும்பினால் உறுதியாக அவரை நான் சந்திப்பேன். மக்களவை தேர்தலில் அமமுகவுன் இணைந்து பணியாற்றுவேன். பாஜகவின் அகில இந்திய தலைமையுடன் தொடர்பில் இருக்கிறோம். அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும். 3-வது முறையாக மோடி பிரதமராவார். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்