பிரதமர் மோடியின் வருகையால் கட்சியினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை பெருமிதம்

By செய்திப்பிரிவு

சேலம்: பிரதமர் வருகையில் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக அலுவலகத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திறந்துவைத்தார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு, மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரதமர்வருகையால் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தை தேசிய அளவில் தரம் உயர்த்தியவர் துணைவேந்தர் ஜெகநாதன். அவர் உள்பட 4 பேராசிரியர்கள் சேர்ந்து, தனியார் நிறுவனத்திடம் இருந்து வரும் பணத்தை, அறக்கட்டளை மூலமாக மாணவர்களின் திறமையை வளர்க்கும் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு பல்கலை.களில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்த தவறும் இல்லை. துணைவேந்தர் மீது முகாந்திரமின்றி வன்கொடுமைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமித் ஷாக்கு புகார் கடிதம்: துணைவேந்தர் கைது நடவடிக்கை விவகாரம் தொடர்பாக, டிஜிபி, சேலம் காவல் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆத்தூரில் இரு விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், சம்பந்தமே இல்லாமல் பாஜகமாவட்ட இலக்கிய அணி செயலாளரை தொடர்புபடுத்துகின்றனர்.

பிற மாநிலங்களில் பெயருடன் சாதிப் பெயரையும் இணைத்தேஎழுதுகின்றனர். அதனடிப்படையில்தான் விவசாயிகளின் சாதிப் பெயரை அமலாக்கத் துறை குறிப்பிட்டிருக்கும். தமிழக போலீஸாரும் எஃப்ஐஆர்-ல் சாதிப் பெயரை குறிப்பிட்டுத்தான் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் பட்டியல் இனத்தவரைப் பாதுகாக்க வன்கொடுமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதுடன், தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடக்கக் கூடாது என்பதற்காகத்தான், தொகையை வங்கிக் கணக்கில் செலுத்துங்கள் என்றோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தொடர்ந்து, பேளூர், ஆத்தூரில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்