“திருப்பத்தூரும், திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள்” - அமைச்சர் எ.வ.வேலு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூரும், திருவண்ணாமலையும் எனக்கு இரண்டு கண்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக உள்ளது என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி யில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணா துரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி ( திருப்பத்தூர் ), தேவராஜி ( ஜோலார்பேட்டை ), அ.செ.வில்வநாதன் ( ஆம்பூர் ), திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘தொழிலை விரிவுபடுத்தவும், அவற்றை பாதுகாக்க வேண்டியும், தொழில் முனை வோரை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப் படுகின்றன. தமிழர்கள் கடல் கடந்து வியாபாரம் செய்தனர் என பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. அப்போது , சந்தனம், முத்து, மிளகு போன்றவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முனைவோர்களை தேடி துபாய் சென்றார்.

அது மட்டுமின்றி, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடு களுக்கும் சென்றார். இதனால், 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் 7, 8-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கின்றன. இதற்காகத்தான் உள்ளூர் முதலீட்டாளர்களை அழைத்து முதலீடு செய்ய வேண்டும் என் பதற்காக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நமது நாட்டின் சராசரி ஜிடிபி 9 சதவீதம். ஆனால், தமிழகத்தில் ஜிடிபி 11.4. சராசரியை விட நாம் அதிகமாக உளளோம். இந்திய அளவில் தமிழகம் தொழில் செய்ய வசதி, பாதுகாப்பான மாநில வரிசையில் 3வது இடம் பிடித்துள்ளது.

உலக முதலிட் டாளர்கள் மாநாட்டுக்காக திருப் பத்துார் மாவட்டத்தின் இலக்கு ரூ.500 கோடி ஆகும். ஆனால், 66 நிறுவனங்கள் மூலமாக 552 கோடி ரூபாய் என நாம் இலக்கை முறியடித்துள்ளோம். இதனால் வழங்கப்பட்ட இலக்கைகாட்டிலும் நாம் அதிகமான முதலீடு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதன் மூலம் மறைமுகமாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு வாக்கில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என நான் தான் அப்போது குரல் கொடுத்தேன். அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் முதலில் பிரிக்கப்பட்டது. இதை யடுத்து, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டம் 3 மாவட்டங்களாக பிரிக் கப்பட்டன.

திருப்பத்தூரை சந்தன நகரம் என்று தான் நாங்கள் சட்டப் பேரவையில் குறிப்பிடுவோம். தொழில் வளர்ச்சியில் இந்த மாவட்டம் பின் தங்கியுள்ளது என் பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இங்கு 887 தொழிற்சாலைகள் உள்ளன. 385 வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், 553 நெசவு கூட தொழிற்சாலைகள், 672 ரசாயன தொழிற்சாலைகள், 1,266 உணவு சார்ந்த இடங்கள், 449 இயந்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலை 3 ஆயிரத்து 342 இதர தொழிற்சாலைகள் என மாவட் டத்தில் 8 ஆயிரத்து 218 தொழிற் சாலைகள் உள்ளன.

இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 35 சதவீதம் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி மூலம் டாலர் வருவாயில் திருப்பத்தூர் மாவட்டம் இந்தியாவில் 2-ம் இடம் பிடித்துள்ளது. சிட்கோ மூலம் 41 நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. மாதனுார், வாணியம் பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழில், நாட்றாம்பள்ளியில் ஊதுவத்தி, திருப்பத்தூர், கந்திலி பகுதிகளில் தேங்காய் கொள்முதல் ஆகிய தொழில்கள் நடந்து வருகின்றன. அரசிடம் ஏதாவது கோரிக்கை வைத்தால் அனைத்தையும் செய்து தருகிறது என இங்கு வந்துள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அடைய செய்கிறது.

தனியார் முதலீடு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனால்தான் வெளிநாடுகளுக்கு சென்று தனியார் நிறுவனங்களை இங்கு அழைத்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம், தொழில் முனைவோருக்கு சிறந்த மாவட்ட மாக உள்ளது. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நன்றாக உள்ளது. காவல் துறை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையாக உள்ளது.

இந்த மாவட்டத்தில் மனித வளமும் போதிய அளவு உள்ளது. துறைகள் மேலும் வளர்ச்சி பெற, மாவட்ட ஆட்சியர் மூலமாக என்னிடம் தெரிவித்தால் அதற்கான அனுமதி பெற்றுத்தருவதில் நான் முனைப்புடன் செயலாற்றி அனுமதி பெற்றுத் தருவேன். திருவண்ணாமலையும், திருப் பத்தூரும் எனக்கு ஒன்று தான். இரண்டும் எனது கண்கள். தொழில் முனைவோராக வந்திருப்பவர்கள், மாவட்ட வளர்ச்சிக்கு முன் நிற்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்