புதுச்சேரி: வில்லியனூர் அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கோயில் அர்ச்சகர். இவரது மனைவி வள்ளி (40). இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். வள்ளிக்கு நேற்று இரவு வயிற்றுவலி ஏற்பட்டு அவதிபட்டுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த செவிலியர் மாத்திரை மற்றும் ஓஆர்எஸ் பவுடர் கொடுத்துள்ளார். இதன்பின் வீட்டுக்கு சென்ற வள்ளிக்கு இன்று அதிகாலை மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது. மீண்டும் வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போதும் அவருக்கு மாத்திரை கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்ட வள்ளி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மதியம் வள்ளிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு வள்ளியை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். ஆனால், ஓட்டுநர் இல்லை என்று கூறி ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வள்ளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோயில் எதிரில் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வள்ளியின் உடலை சாலையில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
» 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
» ஒரு மாதமாக சர்வர் பிரச்சினை: பணப்பலன்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் பாதிப்பு
அப்போது, ஆம்புலன்ஸ் கேட்டு கொடுக்காததால் வள்ளி இறந்ததாக குற்றம் சாட்டினர். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இதன்பின் வள்ளியின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago