திருப்பூர்: மதுரையில் நடைபெறும் எஸ்டிபிஐ மாநாடு தொடர்பாக திருப்பூர் உஷா திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையை, அகற்றும் படி போலீஸார் தரப்பில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பதாகையை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் அகற்றினர். அதே இடத்தில், அயோத்தி ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு தொடர்பான பதாகையை பாஜகவினர் வைத்தனர். இதை அகற்றக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர், நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜகவினரின் பதாகை அகற்றப்பட்டது. அதே இடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை வைத்தனர்.
இதை கண்டித்து, அப்பகுதியில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில், போலீஸார் சென்று இரு தரப்பு பதாகைகளையும் பறிமுதல் செய்தனர். திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு தரப்பினருக்கும் பதாகை வைக்க அனுமதி இல்லை என போலீஸார் தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago