பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு!

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுகரும்பும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதோடு ரூ.1,000 ரொக்கத்தை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுகரும்பும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE