அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களை நிறுத்தி வைத்தது ஏன்? - தலைமை செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களை கடந்த 3 மாதமாக நிறுத்தி வைத்திருப்பது ஏன் என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக பணியாற்றி வரும் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களை முறையாக வழங்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை தாமதமின்றி மேற்கொள்ள பொதுத்துறைச் செயலரை சிறப்பு செயலராக நியமித்து அரசு உத்தரவிட்டிருந்தது.

அதேபோல அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பில்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் அந்தந்த துறைகளின் துணைச் செயலர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 15 வரை அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்த 4,638 கட்டண பில்களில் 943 பில்கள் சரிபார்க்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 8 பில்களுக்கான கட்டணங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 8 பில்களுக்கு மட்டுமே பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒரு சதவீத பில்களை கூட வழங்காமல் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறையில் வேறு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அவற்றை ஆக்கப்பூர்வமான வகையில் சரிசெய்வது குறித்தும் அந்த அறிக்கை மூலமாக விளக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஜன.22-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்