உதகையில் பாஜக தலைவர் மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை-கூடலூர் சாலையில் மான்டிரோசா காலனியில் `திறந்த வேதாகம தேவசபை' என்ற கிறிஸ்தவ சபையை சேவியர் என்பவர் நீண்டகாலமாக நடத்தி வருகிறார். இந்த சபையின் அருகே, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜின் வீடு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அந்த சபையில் நள்ளிரவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, மோகன்ராஜ் வீட்டின் `கேட்' முன்புசிலர் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து, மோகன்ராஜின் மகன் தேஜஸ்வி ஆதித்யா, மோகன்ராஜின் அண்ணன் முகேஷ் ஆகியோர், கேட்டின் முன்பு வாகனம் நிறுத்திய காந்தல் பகுதியை சேர்ந்த எபினேசர் மற்றும் சிலரிடம், வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமாதானம் ஏற்படுத்த மோகன்ராஜ் அங்கு வந்தார்.

ஆனால், வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் எபினேசர் மற்றும் அவரது நண்பர்கள், மோகன்ராஜைத் தாக்கினார்களாம். மேலும், முகேஷும் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மோகன்ராஜ், முகேஷ் ஆகியோர் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகராறில் காயமடைந்த எபினேசரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், பாஜக நகரச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர், கட்சியின் மாவட்டத் தலைவரை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி ரோஹினி சந்திப்பு அருகே நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தமுயன்றனர். ஆனால், ஆர்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. எனினும், அனுமதியைமீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபாஜகவினரை, டிஎஸ்பி-க்கள்யசோதா, விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் கைது செய்து,சிறுவர் மன்றத்தில் அடைத்தனர்.

இதற்கிடையில், தாக்குதல் நடத்தியதாக எபினேசர், அவரது சகோதரர் நிதின்ஜோயல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்