சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சென்னையை நோக்கிபுறப்பட்ட விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நேற்று காலை கிளாம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தன. ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்குச் செல்லவிருந்த பயணிகளை, பொத்தேரி ரயில் நிலையத்தில் நடத்துநர்கள் இறக்கிவிட்டனர். அதேபோல், கிளாம்பாக்கம் வந்தடைந்தவர்கள் அங்கிருந்து மாநகரபேருந்துகள் வாயிலாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
இதற்காக நேற்று காலை முதலே மாநகர பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கத் தொடங்கின. அதேபோல், சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதன்படி, திருச்சி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜன.15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
வெறிச்சோடிய கோயம்பேடு: இது தவிர்த்து, பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பேருந்து இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்துநிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரம், பேருந்து இயக்கம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், கிளாம்பாக்கத்துக்கு வருமாறும் நடத்துநர்கள் பயணிகளைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தலை வழங்கினர். மேலும், பயணிகள் வர தாமதமானாலும் அவர்களை காத்திருந்து அழைத்துச் செல்லுமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
» குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை
» 2024-ஐ மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராவோம்: ஆளுநர்கள், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஜனவரி 31-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போருக்கான வித்தியாசத் தொகை, அவர்கள் பயணம் முடிவடைந்த பிறகு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago